விவசாய நிலத்தில் ஆசிரமம் கட்டிய நித்யானந்தா- உண்மையை மறைக்க சோளப் பயிர்!
shockan.blogspot.com
நித்யானந்தாவின் ஆசிரமம் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதை கையகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூர் அருகே மைசூர் சாலையில் பிடுதி அருகே அமைந்துள்ளது நித்யானந்தாவின் தியான பீட ஆசிரமம்.
இந்த நிலத்தின் பட்டாக்களை கர்நாடக போலீசார் ஆராய்ந்தபோது அவை விவசாய நிலங்கள் என்று தெரியவந்துள்ளது. விவசாய நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த அரசின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அந்த அனுமதி பெறப்படவில்லை. மேலும் அந்த நிலம் விவசாயத்துக்கே பயன்படுத்தப்படுகிறது என்பது போல காட்டுவதற்காக, ஆசிரமத்தின் ஒரு பகுதியில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த மோசடித்தனம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு கர்நாடக போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
ஆனால், இதுவரை ஆசிரமம் பதிலளிக்கவில்லை. இதையடுத்து ஆசிரமத்தை கையப்படுத்தும் நடவடிக்கைகளை போலீசார் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
please post this in english
ReplyDelete