திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்
27, அக்டோபர் 2015
திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.
திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.
வேதாரண்யம் மடத்திற்குச் சொந்தமான இந்த மடம் தற்போது ஆளாளுக்குக் கைமாறி ஆத்மானந்தா வசம் வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யானந்தாவின் நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் ஆக எட்டுச் சீடர்கள் அப்பகுதிவாழ் மக்களுக்குத் தெரியாமல் தங்கியிருந்திருக்கின்றனர். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புன்னியதானம் செய்வது குறித்து ஆலோசனை கேட்க சென்றிருக்கிறார். அவர் வருவதைப் பார்த்த நித்யானந்தா சீடர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி "நீங்க யாரு? எதுக்கு இங்க வர்றீங்க? மடத்தை இரண்டு கோடி கொடுத்த நாங்க வாங்கிட்டோம்" என்று ஏகவசனத்தோடு வசைபாடி வெளியேற்றியிருக்கின்றனர். பூஜை நேரத்தில் கரடியைச் சந்தித்ததால் கோபத்தோடு வெளியே வந்தவர் ஆக்ரோஷமாகக் கத்தி மக்களைத் திரட்டி அவர்கள் காவல்துறைக்கு அறிவுப்புக் கொடுத்தனர்.
காவல்துறையினரும் தாசில்தாரும் மடத்திற்கு விரைந்து வந்து சீடர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். பெண் சீடர்களோ மேலிட உத்தரவு வரும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டோம் என்று ஆங்காரமாக நிற்கின்றனர். ஆண் சீடர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கின்றனர் காவல்துறையினர். இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி தீயாகப் பரவ துவங்கியுள்ளது.
Credits: Nakkheeran
See same news in English
Credits: Nakkheeran
See same news in English
No comments:
Post a Comment