பெங்களூரு:'சாமியார் நித்யானந்தா, ஆண்மையுள்ளவர் தான்' என, போலீசார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிடதி நித்யானந்தா சாமியார், பாலியல் பலாத்காரம் செய்ததாக, வெளிநாட்டில் வாழும் இந்திய பெண் ஒருவர், புகார் கொடுத்ததையடுத்து, ராம்நகர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 'சிறுவனுக்கு உரிய வளர்ச்சி தான் எனக்கு உள்ளது. பெண் கூறிய புகார் தவறு' என, நித்யானந்தா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
பல கட்ட சட்ட போராட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின், கடந்த செப்டம்பர், 8ம் தேதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
வெளிநாடு செல்லவிருப்பதால், வழக்கை துரிதப்படுத்தும்படி, நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின், 31 பக்க அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அதில், நித்யானந்தா முழு ஆண்மையுடன் உள்ளார். பாலியல் நோய் எதுவும் தாக்கவில்லை. பொதுவாக, 31 முதல், 49 வயதுள்ள ஆண்களுக்கு இருக்கும், அவர், ஆண்மை உள்ளவர்தான் என்று குறிப்பிட்டிருந்தது. இதுபற்றி நித்யானந்தா கூறுகையில், ''மருத்துவ அறிக்கையை வைத்து, இறுதி தீர்ப்பாக கருத வேண்டாம். என் மீது பொய் வழக்கு போட்டோரை எச்சரிக்கிறேன். சட்டப்படி அனைத்து புகார்களையும் சந்திப்பேன்,'' என்றார்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1125314
http://tamil.thehindu.com/india/
No comments:
Post a Comment