பெங்களூரு: நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை கர்நாடக நீதிமன்றத்தில் சி.ஐ.டி. போலீசார் இன்று (26ஆம் தேதி) தாக்கல் செய்தனர்.
பெங்களூருவில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து, தனக்கு ஆண்மை சக்தி இல்லை என தன்னை விசாரித்த போலீசாரிடம் நித்யானந்தா கூறினார்.

இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டதோடு, அதற்கு நித்யானந்தா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவரை கைது செய்து ஆண்மை பரிசோதனை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பெங்களூரு மடிவாளாவில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டரை மாதமாக ஆய்வு செய்த டாக்டர்கள், 31 பக்கங்கள் கொண்ட மருத்துவ அறிக்கையை சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்தனர்.
இந்நிலையில், நித்யானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு இன்று (26ஆம் தேதி) ராம்நகரம் மாவட்ட செஷன்ஸ் 1வது நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், நித்யானந்தா உள்பட அவரது சீடர்கள் நேரில் ஆஜராகினர். அப்போது கர்நாடக சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரெண்ட் லோகேஷ்குமார், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், 'நித்யானந்தா முழு ஆண்மை பலத்துடன் இருக்கிறார்' எனக் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

http://news.vikatan.com/article.php?aid=35363
http://www.thedipaar.com/news/nithyananda-potency-test-report/
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66465
No comments:
Post a Comment