திருச்சி, : திருச்சியை சேர்ந்த பெண் பெங்களூர் நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந் தார். அவரது சாவில் சந்தே கம் இருப்பதாக கூறி பெற் றோர் ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை போலீசார் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி நவலூர்குட்டபட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகள் சங்கீதா(24). இவர் கடந்த 4 வருடமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சீடராக இருந்து வந்தார். இந்நிலையில் ஆசிரமத்தில் இருந்து கடந்த 28ம்தேதி சங்கீதாவின் தந்தைக்கு ஒரு அழைப்பு வந் தது. அதில் சங்கீதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் உடனே புறப்பட்டு பெங்க ளூர் வரவும் என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.
இதனால் சங்கீதாவின் பெற்றோர்கள் பெங்களூ ருக்கு புறப்பட்டுச் சென்ற னர். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வரும்வழியில் இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 30ம் தேதி திருச்சி கொண்டு வரப்பட்டு நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நேற்று சங்கீதாவின் பெற் றோர் ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். இச்சம்பவத்தால் நேற்று ராம்ஜிநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=410934&cat=504

No comments:
Post a Comment